Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு 3 தங்கம்

$
0
0

கபாலா : ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் 7 பதக்கம் வென்றுள்ளனர்.

அஜர்பைஜான் நாட்டின், கபாலா நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பினால் நடத்தப்பட்டுவரும் ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் 3 தங்கம் உட்பட 7 பதக்கங்களை அள்ளியுள்ளனர்.

இந்திய வீரர் சுபாகர் ப்ரமானிக் என்ற வீரர் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 205.5 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். 205.2 புள்ளிகளை பெற்று கச் குடியரசின் பிளிப் நெபிசல் என்ற வீரர் வெள்ளி பதக்கமும், ருமேனியாவை சேர்ந்த டிரகோமிர் லார்டசி என்ற வீரர் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

இந்தியாவின் சம்பஜி படேல் என்ற வீரர் 25 மீட்டர் தனிநபர் பிரிவில் 562 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். மேலும் குழு பிரிவில் சம்பஜி படேல், குர்மீட் மற்றும் ரிதுராஜ் சிங் ஆகியோரிடம் இணைந்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>