Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

Parupalli Kashyap: காஷ்யப்பை திருமணம் செய்ய சரியான நாள் இது தான்- சாய்னா நேவால் பேட்டி

$
0
0

புனே : பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கும், மற்றொரு பேட்மிண்டன் வீரார் பாருபள்ளி காஷ்யப்க்கும் வரும் டிசம்பர் 16ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட்டை தொடர்ந்து மிகவும் கொண்டாடப்படும் விளையாட்டாக பேட்மிண்டன் வளர்ந்து வருகின்றது. பேட்மிண்டனில் சாய்னா நேவால், பாருபள்ளி காஷ்யப் என்றால் அறியாதவர் இருக்க முடியாது.

இப்படி பேட்மிண்டனில் பிரபலங்களாக திகழும் சாய்னா - காஷ்யப் இருவரும் நீண்ட காலம் காதலித்து வந்தனர். இவர்களுக்கு வரும் டிசம்பர் 16ம் தேதி திருமணத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாய்னா பேச்சு:
காஷ்யப்பை கடந்த 2007 முதல் காதலித்து வருகின்றேன். இருப்பினும் இருவரும் திருமணம் குறித்து இதுவரை யோசிக்காமல் இருந்தோம். பேட்மிண்டனில் ஜொலிக்க வேண்டும், அடுத்தடுத்து போட்டிகள் வருவதால் அதில் வெற்றி பெறுவதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தோம். திருமணம் செய்தால் விளையாட்டில் கவனம் செலுத்துவது சிரமமாக அமைந்து விடும் என இருவரும் தங்களின் விளையாட்டில் கவனம் செலுத்தி வந்தோம்.
எங்களின் திருமணம் டிசம்பர் 16ம் தேதி நடைப்பெறுவது தான் சரியானதாக இருக்கும் என இருவரும் எடுத்த முடிவை எங்கள் குடும்பத்தினரும் ஆமோதித்து ஏற்பாடுகள் நடத்தி வருகின்றனர்.

ஏனெனில் வரும் டிசம்பர் 20ம் தேதி முதல் பிரீமியர் பேட்மிண்டன் தொடர் தொடங்குகிறது. பின்னர் 2020ல் டோக்கியோவில் நடைப்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிப் போட்டிகள் நடைப்பெற உள்ளன.

அதனால் எங்களின் திருமணம் டிசம்பர் 16ம் தேதி நடப்பது தான் சரியானதாக இருகும் என சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>