கோடைக்கால இளையார் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அர்ஜெண்டினாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 6ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி வரும் 18ஆம் தேதி வரை நடக்கிறது.
இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவு துப்பாக்கிச்சூடு போட்டியில் இந்தியா சார்பில் துஷர் மானே கலந்துகொண்டார். இறுதிச்சுற்றில் 247.5 புள்ளிகளைப் பெற்ற அவர் இரண்டாவது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ரஷ்யாவின் கிரிகோரி ஷகோவ் 249.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும் செர்பியாவின் அலெக்சா மிட்ரோவிக் 227.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
துஷர் வென்ற பதக்கம் இந்தியா இத்தொடரில் பெற்ற முதல் பதக்கமாகவும் அமைந்துள்ளது.
Mobile AppDownload Get Updated News