Here’s the #MedalTally at the end of action today at @asianpg2018.India opened it’s gold medal haul today & added a… https://t.co/JgjcmyCYbg
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷியாவில் தொடங்கியது. அக்டோபர் 16ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் இன்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
அதன்படி, ஈட்டி எறிதல் போட்டியில் ஆடவர் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர் சந்தீப் செளதரி, 60.01 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதலிடம் வென்று தங்கப்பதக்கம் பெற்றார். இதே போல், நீச்சல் போட்டியில் ஆடவர் பட்டர்ஃபிளை 50மீட்டர் பிரிவில் இந்திய வீரர் ஜாதவ் சுயாஷ் நாராயண் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். மேலும், ஓட்டப்பந்தயத்தில், 1500மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வீராங்கணை ரஜூ ரக்ஷிதா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
ஏற்கனவே, நேற்று ஞாயிறன்று நடந்த போட்டியில், இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் உட்பட 5 பதக்கங்களை இந்தியா வசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த 100 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சலில் S-10 பிரிவில் தேவான்ஷி சத்திஜவான் வெள்ளி வென்றார். சுயாஷ் ஜாதவ் 200 மீட்டர் தனிநபர் மெட்லே நீச்சல் SM-7 பிரிவில் வெண்கலம் வென்றார்.
Mobile AppDownload Get Updated News