சென்னை: பாங்காக்கில் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில், சென்னையைச் சேர்ந்த சிறுவன் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளான்.
தாய்லாந்து பாங்காக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகள் பங்கேற்ற, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில், சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தவிஷ் என்ற 5 வயது சிறுவன் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார்.
இதையடுத்து, நேற்று சென்னை திரும்பிய சிறுவன் தவிஷ்க்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Mobile AppDownload Get Updated News