நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடைசியாக 2014ல் தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி 11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலம் என 57 பதக்கங்களை பெற்றது. இதன் மூலம் பதக்கப் பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்தது.
இந்தாண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018 இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தாவில் கோலாகலமாக தொடங்கி நடைப்பெற்று வருகின்றது.
3 கோடி பரிசு :
நேற்று முதல் நாள் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெண்கல பதக்கம் கிடைத்தது.
நேற்று நடந்த மல்யுத்த 65 கிலோ ஃபிரி ஸ்டைல் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பஜ்ரங் புனியா சிறப்பான வெற்றியை பதிவு செய்து இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் வென்று கொடுத்தார்.
இதையடுத்து நாடு முழுவதும் பஜ்ரங் பூணியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஹரியானா விளையாட்டு அமைச்சர் அனில் விஜ் அரசு சார்பாக அவருக்கு ரூ.3 கோடி ரொக்க பரிசு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mobile AppDownload Get Updated News