நம்மில் கால்பந்து ஹீரோ என கேட்டால் பலருக்கு தெரிந்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 33 வயதான ரொனால்ட்டோ கால்பந்து ரசிகர்களின் மனதில் கடவுளாகவும், ஹீரோவாகவும் தெரிகின்றார்.
போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து கிளப் அணிக்காகவும், ரியல் மேட்ரிட் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, கால்பந்து வீரர்களில் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
வரி ஏய்ப்பு :
கால்பந்து விளையாட்டு, விளம்பரங்கள் மூலம் பல கோடிகள் பணத்தை ஈட்டும் ரொனால்டோ பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும், அதற்கான தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளதாக ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2 ஆண்டு ஜெயில்:
இந்த குற்றத்திற்காக ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், $21.8 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 150 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை ரொனால்டோவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இன்று உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் நாட்டுக்காக ரொனால்டோ விளையாட உள்ள நிலையில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதே போல் மற்றொரு கால்பந்து ஹீரோ லியோனல் மெஸ்ஸியும் கடந்த 2016-ம் ஆண்டு வரி ஏய்ப்பு குற்றத்தில் சிக்கியதால் அவருக்கும் அவரின் தந்தைக்கும் 47லட்சம் டாலர் அபராதமாக விதிக்கப்பட்டது.
Mobile AppDownload Get Updated News