HERO INTERCONTINENTAL CUP IS OURS!!! Kudos to @IndianFootball for winning it in style. #INDvKEN #WeAreIndia… https://t.co/gaBHMyXUH2
கண்டங்களுக்கிடையேயான கால்பந்து 201 8போட்டி இந்தியாவில் நடைப்பெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து, கென்யா, சீனா தைபே ஆகிய அணிகள் மோதின.
இந்தியா ஆதிக்கம் :
லீக் சுற்றில் இந்திய அணி 3 போட்டிகளில் 2ல் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அதே போல் லீக் போட்டியில் கென்யா அணியும், நியூசிலாந்து அணியும் தலா இரு போட்டிகளில் வென்றது.
இருப்பினும் இந்தியா மற்றும் கென்யா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா சாம்பியன் :
இன்று மும்பை கால்பந்துஅரங்கத்தில் நடந்த இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் அட்டகாசமான இரண்டு கோல்களால் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
மெஸ்ஸி சாதனையை சேத்ரி சமன்:
உலகளவில் கால்பந்து ரசிகர்களின் ராஜாவாக விளங்கும் மெஸ்ஸியின் கோல் சாதனையை, 64 கோல்களை அடித்து இந்திய கேப்டன் சுனில் சேத்ரி சமன் செய்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News