Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஐஎஸ்எல்: பெங்களூர் அணியை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னை!

$
0
0

பெங்களூரு : பெங்களூரில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிபோட்டியில், பெங்களூர் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னையின் எப்சி அணி.

இந்தியன் சூப்பர் லீக் எனப்படும், கால்பந்து தொடரின் இறுதிபோட்டி பெங்களூரில் இன்று நடைபெற்றது. இதில் லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பெங்களூர் அணியும் சென்னை அணியும் மோதின. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

மேலும், போட்டி பெங்களூரில் நடைபெறுவதால், சொந்த மண்ணில் முதல் முறை கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூர் அணியும், இரண்டாவது முறை கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணியும் களமிறங்கின.

ஆட்டம் தொடங்கிய முதல் நொடியிலிருந்தே மைதானாத்தில் அனல் பறந்தது. ஆட்டத்தின் 9 வது நிமிடத்தில் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரரான சுனில் சேத்ரி ஒரு ஹெட்டர் கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார். அதைத் தொடர்ந்து சென்னை அணியின், மைல்சன் ஆல்வ்ஸ் 17 வது நிமிடத்தில் ஒரு கோலும், 45 வது நிமிடத்தில் மற்றொரு கோலும் அடித்து சென்னை அணிக்கு வலு சேர்த்தார்.

இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் வெற்றிக்காக மிகவும் போராடின. இரண்டாவது பாதியில் 67வது நிமிடத்தில் சென்னை அணியின் ரபேல் அகஸ்டோ 3வது கோலை அடித்து சென்னை அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கினார்.

சென்னை அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது பாதி முடிந்து கூடுதல் நேரத்தில் பெங்களூர் அணியின் மிகு பெங்களூர் அணிக்காக இரண்டாவது கோலை அடித்து பெங்களூர் அணிக்கு புத்துயிர் கொடுத்தார். பின்னர் இருந்த ஒரு சில நிமிடங்களில் பெங்களூர் அணியின் கோல் அடிக்கும் முயற்சி தோல்வியுற்றதால், சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் ஐஎஸ்எல் கோப்பையை இரண்டாவது முறை சென்னை அணி கைப்பற்றியது. மேலும், ஐஎஸ்எல் கோப்பையை இரண்டு முறை கைப்பற்றிய ஒரே அணி என்ற சாதனையையும் சென்னை அணி படைத்துள்ளது. இந்த வெற்றியால் சென்னை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>