Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்; அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

$
0
0

டெல்லி: ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்ஹாம் நகரில் 2018ஆம் ஆண்டின் ’ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்’ நடைபெற்று வருகிறது.

அதில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பான் நாட்டின் நொஸோமொ ஒகுஹராவை சந்தித்தார். முதல் சுற்றில் 20-22 என பின்னவரை சந்தித்தார்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட சிந்து, 21-18, 21-18 என 2வது, 3வது சுற்றுகளைக் கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இருவரும் தனது முழு பலத்தை நிரூபித்து விளையாடியதால், ஆட்டம் ஒரு மணி 24 நிமிடங்கள் வரை சென்றது.

இந்த வெற்றி மூலம், சிந்து - ஒகுஹரா நேருக்கு நேர் மோதிய ஆட்டங்களில் இருவரும் தலா 5 முறை வெற்றி பெற்றுள்ளனர்.

மற்றொரு காலிறுதி போட்டியில் ஜப்பானின் அகானே யாமாகுச்சி மற்றும் ஸ்பெயினின் கரோலினா மரின் மோதுகின்றனர்.

இதில் வெல்லும் வீராங்கனையுடன், அரையிறுதியில் பிவி சிந்து மோதவுள்ளார்.

PV Sindhu defeats Japan's Nozomi Okuhara 20-22, 21-18, 21-18 to enter semifinals of #AllEnglandOpen2018 Badminton Championship.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


நீங்கள் வாசித்த கிரைம் நாவல் கதாபாத்திரங்கள் சினிமாவுக்கு வருகிறார்கள்!


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


3 மாதங்களில் ரூ.16,000 அதிகரிப்பு டிஎம்டி கம்பிகள் விலை கிடுகிடு உயர்வு:...


வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் குடோனாக மாறிய சமூக நலக்கூடம்: மக்கள்...


பாண்டியநாடும் வேதாசலமும்


காவியம் – 19


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்



Latest Images