இந்த புரே மல்யுத்த லீக் போட்டியில் பஞ்சாப் ராயல்ஸ், டெல்லி சுல்தன், ஹரியானா ஹாமெர்ஸ், ஜெய்பூர் நிஞ்சாஸ், உ.பி தங்கல், மும்பை மஹாராத்தி என மொத்தம் 6 அணிகள் விளையாட உள்ளன.
2018 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ள புரோ மல்யுத்த லீக் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு நேற்று நடைப்பெற்றது. இதில் இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரும், உலக மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றவருமான சுசில் குமார் டெல்லி சுல்தான் அணியால் ரூ. 55 லட்சம் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார்.
அதே போல் 2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் சாக்ஷி மாலிக் மும்பை அணியால் ரூ. 36 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
Mobile AppDownload Get Updated News