இந்தியாவில் நடைபெற்று வந்த உலக ஹாக்கி லீக் போட்டியின் பைனல் போட்டியில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவும், ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவும் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் முதல் பாதியில் இருஅணிகளும் தல ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இந்நிலையில், ஆட்டத்தின் இறுதிநேரத்தில் ஆஸ்திரேலிய அணி தனக்கு கிடைத்த பெனால்டியை கோலாக மாற்றி 2-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் உலக ஹாக்கி லீக் பட்டத்தை ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை வென்றுள்ளது. மேலும், தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அர்ஜென்டினா அணியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது.
Mobile AppDownload Get Updated News