ஹெவி வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான அந்தோணி ஜோஸ்வா, வித்தியாசமாக கதவை தன் கைகளால் உடைத்து கடையை திறந்த வைத்தார்.
நெதர்லாந்த் நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் கடைதிறப்பு விழா ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட குத்துச்சண்டை சாம்பியனான அந்தோணி ஜோஸ்வா வித்தியாசமாக, கதவை தன் கைகளால் உடைத்து கடையை திறந்த வைத்தார்.
தன் கம்பீரமான கைகளால் கண்ணாடி கதவின் மேல் இரண்டு முறை கையை ஒங்கி குத்தினார். இதில் கண்ணாடி கதவு சுக்குநூறாக உடைந்தது. இந்த நிகழ்வை அந்தோணி ஜோஸ்வாவின் தீவிர ரசிகர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Mobile AppDownload Get Updated News