ஆசியக் கோப்பை இறுதி போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் சீன அணிகள் ஜப்பானில் உள்ள கக்கமிகஹாராவில் மோதின.
போட்டி நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன. இந்திய அணியில் நவ்ஜோத் கவுர் ஒரு கோலும், சீனா அணியின் சார்பாக டைன்டைன் லூவோவும் ஒரு கோலும் அடித்தனர்.
இதனால் வெற்றியைத் தீர்மானிக்க இரு அணிகளுக்கும் பெனால்டி சூட்அவுட் வழங்கப்பட்டது. அதில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் சீனா அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய மகளிரணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பைக்கு தகுதிப்பெற்றுள்ளது.
India beat China to win women's Asia Cup hockey title, qualify for 2018 World Cup
Mobile AppDownload Get Updated News