24 வயதான கிடாம்பி ஸ்ரீகாந்த் 2017ஆம் ஆண்டில் நான்கு பேட்மிண்டன் தொடர்களில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் நான்கு பட்டம் பெற்ற ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை வசமாக்கியுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியாவில் நடைபெற்ற சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்ற அவர், சிங்கப்பூர் ஓபனிலும் இறுதி வரை முன்னேறி இரண்டாவது இடம் பெற்றார்.
அண்மையில் நடைபெற்ற டென்மார்க் ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபன் தொடர்களில் அடுத்தடுத்து பட்டம் வென்று கலக்கினார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டு முறை பட்டம் வென்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் இவருக்குக் கிடைத்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆண்களுக்கான பேட்மிண்டன் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 4வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்குத் தாவியுள்ளார்.
Mobile AppDownload Get Updated News