Quantcast
Viewing all articles
Browse latest Browse all 2245

மூத்தோருக்கான ஆசிய தடகள போட்டியில் 3 பதக்கங்கள் தமிழக முதியவர் சாதனை..!

சீனாவில் நடைபெற்ற மூத்தோருக்கான ஆசிய தடகள போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சுப்பையா காந்தி 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பையா காந்தி. இவருக்கு தற்போது 75 வயது ஆகிறது. இவர் சீனாவில் நடைபெற்ற , மூத்தோருக்கான ஆசிய தடகள போட்டியில் பங்கேற்று 3 பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த மாதம் சீனாவில், ஆசிய அளவில் 75-79 வயது பிரிவுகளில் நடைபெற்ற தடகள போட்டியில், குண்டு எறிதலில் தங்க பதக்கம், நீளம் தாண்டுதலில் வெள்ளி மற்றும் வட்டு எறிதலில் வெண்கல பதக்கத்தை சுப்பையா காந்தி வென்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து சுப்பையா காந்தி கூறுகையில், பிற நாடுகள் விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, இந்தியாவும் கொடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு . மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவித்தொகை மற்றும் வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் சுப்பையா காந்தி வருத்தம் தெரிவித்தார். இதுவரை நடைபெற்ற மூத்தோருக்கான சர்வதேச போட்டியில் சுப்பையா காந்தி 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

A 75 years old Subbiah Gandhi won three medals in asia atheletic championship

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>