ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் இந்திய மக்களிடையே பிரபலமானவர் பி.வி. சிந்து. இவர் உலக பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் தற்போது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 6-ம் தேதி வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலிலும் பி.வி.சிந்து 2ஆவது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் சில தோல்விகளால் இரண்டாம் இடத்தை நழுவ விட்ட சிந்து தற்போது மீண்டும் இரு இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிட்த்தக்கது. இதில் சீன பாட்மிட்டன் வீராங்கனை, சூ யிங் முதலிடத்திலும், இந்தியாவின் சாய்னா நெவால் 12-வது இடத்திலும் உள்ளனர்.
p.v.sindhu got the second place in world badminton.
Mobile AppDownload Get Updated News