கொரியா ஓபன் சூப்பர் சிரீஸ் பேட்மிண்டன் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 22–20, 21–17 என்ற நேர்செட் கணக்கில், தாய்லாந்து வீராங்கனை நிட்சான் ஜின்டாபோலை தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவும், ஜப்பான் வீராங்கனை மினாட்சு மிடானியும் மோதினர். இதில் ஜப்பானின் மிடானியை 21-19, 16-21, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பி.வி. சிந்து அரையிறுதி சுற்றிலும் வென்று, கோப்பையை கைப்பற்றுவாரா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Indian badminton player b.v.sindhu reaches the semi-final round on Korean open badminton
Mobile AppDownload Get Updated News