Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து

$
0
0

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இந்தியாவின் பிவி சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவ் நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த காலிறுதிப் போட்டியில் 4வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிவி சிந்து, 5வது இடத்தில் இருக்கும் சீனாவின் சுன் யுவை எதிர்கொண்டார்.



ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-14, 21-9 என்ற நேர் செட் கணக்கில் சுன் யுவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதில், உலகின் 10ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யுஃபெய்யை எதிர்கொள்ளயிருக்கிறார். சென், தாய்லாந்தின் முன்னாள் உலக சாம்பியன் ரட்ச்னோக் இண்டோனன் என்பவரை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த், கொரியாவின் சான் வான் ஹோ உடன் மோதினார். இதில், தடுமாறிய கிதாம்பி 14-21, 18-21 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து காலிறுதிப் போட்டியோடு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

PV Sindhu completed a hat-trick of medals at the World Badminton Championship as she stormed into the semi-finals, lifting India's spirit after Kidambi Srikanth's quarter-final exit here.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


எல்லாம் நாடக மேடை – பாடலாசிரியர் யார்?


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


தேசிய விருது பெற்ற படத்தை வெளியிடுகிறார் வெற்றிமாறன்


பதினேழு வயதுக் கிராமத்துப் பெண்


பள்ளி ஆசிரியை இரும்பு ஸ்கேலால் அடித்ததில் 8ம் வகுப்பு மாணவன் பார்வை இழப்பு?...


Minority Report (2002) Tamil Dubbed Movie HD 720p Watch Online


திருமூலர் அருளிய உயிர்காக்கும் ரகசிய மந்திரம்


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>