சாம்பியன் பட்டம் வென்ற பிரபல அமெரிக்க பாடிபில்டர் டல்லாஸ் மெக்கார்வா் தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டதால் மரணமடைந்துள்ளாா்.
அமொிக்கவை சோ்ந்த 26 வயதான டல்லாஸ் மெக்கார்வா் தனது காதலி டானா புரூக்கிடம் நான் உணவு சமைக்க போகிறேன், ஐ லவ் யூ, குட்பை என்று கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.
அதன்பின்னர் சமைத்த உணவை சாப்பிட்ட போது, உணவு குழாயில் உணவு அடைத்து மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
டல்லாஸ் மெக்கார்வர் என்பவர் அவரது ரசிகர்களால் பிக் கண்ட்ரி என்று அழைக்கப்படுகிறார், 26 வயதான பாடி பில்டா் சமீபத்தில் நடைபெற்ற பாடி பில்டிங் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mobile AppDownload Get Updated News