உலகமே எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே லீக் போட்டியில் இரு அணிகளும் மோதிய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. தற்போது பைனல் என்பதால் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது.
உலக ஹாக்கி லீக் போட்டியின் செமி பைனல் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஹாக்கி போட்டி கிரிக்கெட் மேட்ச் நடைபெறும் லண்டனில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஹாக்கி போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு லண்டன் ஒலிம்பிக் பார்க்கில் தொடங்குகிறது.
மூன்றாவதாக இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பைனல் பேட்மிண்டன் போட்டியும் இன்று தான் நடக்கிறது. இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானை சேர்ந்த கசுமசா சகாயை எதிர்கொள்கிறார். இவர் செமி பைனலில் உலகின் முதல் தர வீரரான வான் ஹோவை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News