ஸ்பெயின் நாட்டில் நடக்கும் மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒன்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம்மை ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் எதிர்கொண்டார்.
சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமில்லாத இப்போட்டியில் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் நடால் வெற்றிக்கனியை வசமாக்கினார்.
இந்த வெற்றியின் உதவியுடன் ரபேல் நடால் சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார். ஐந்தாவது இடத்தில் இருந்த நடால் ஒரு இடத்தில் இருந்த அவர் நான்காவது இடத்திற்கு நகர்ந்திருக்கிறார்.
14 கிராண்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், ஐந்தாவது முறையாக மேட்ரிட் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News