இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துத் தொடருக்கான டிக்கெட் விற்பனை மே 16ஆம் தேதி தொடங்குகிறது.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் இந்தியாவில் நடக்கிறது. வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இத்தொடருக்கான டிக்கெட் விற்பனை மே 16ஆம் தேதி ஆரம்பமாகிறது.
1911ஆம் ஆண்டு ஐ.எஃப்.ஏ. கேடயத்தை வென்ற அணியின் கேப்டன் கவுரி பாபுரி முதல் டிக்கெட்டை பெற்றுக்கொள்வார். அந்த டிக்கெட் மூலம் அவர் தன் குடும்பத்தினருடன் ஏதாவது ஒரு போட்டியை கண்டுகளிக்கலாம். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து வீரர் சார்லஸ் ப்யோல், இந்தியாவில் டிக்கெட் விற்பனைக்கான தூதுவராக செயல்படுவார்.
மே 16ஆம் தேதி சரியாக 19:11 மணிக்கு (இரவு 07:11) டிக்கெட் விற்பனை தொடங்கும்.
Mobile AppDownload Get Updated News