Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு அங்கீகாரம் அளித்தது இந்திய ஒலிம்பிக் சங்கம்

$
0
0

டெல்லி: இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு அங்கீகாரம் அளித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய குத்துச் சண்டை சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தல் உரிய விதிமுறைகளின்படி நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த டிசம்பர் 2012ஆம் ஆண்டு, இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் அங்கீகாரத்தை சர்வதேச குத்துச் சண்டை இடைநீக்கம் செய்தது. இந்நிலையில் கடந்த வாரம் சர்வதேச குத்துச்சண்டை சங்க பார்வையாளர்கள் நேரடி பார்வையில், தேர்தல் நடத்தப்பட்டது. அது உரிய விதிமுறைகளின் படி நடத்தப்பட்டதாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தெரிவித்தது.

இதையடுத்து இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு தற்காலிக அங்கீகாரம் அளித்துள்ளது. மேலும் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கவும் வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து அமெச்சூர் குத்துச்சண்டை சம்மேளனம் மற்றும் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் உரிமை கோரியதை அடுத்து, இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு அங்கீகாரம் அளித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

Boxing Federation of India has been granted affiliation by Indian Olympic Association.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>