Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

20 ஆண்டுகளுக்கு பின் உச்சத்தை எட்டிய இந்திய அணி!

$
0
0

புதுடில்லி: கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்திய அணி கால்பந்து தரவரிசையில் முன்னேறியுள்ளது.

சர்வதேச கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, "பிபா' வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி, கடந்த மாதம் இருந்த 132வது இடத்தில் இருந்து, 31 இடங்கள் முன்னேறி, 101வது இடத்துக்கு பிடித்தது.

சமீபத்தில் இந்திய அணி பங்கேற்ற போட்டிகளில் வெற்றி பெற்றதால், தரவரிசையில் விறுவிறுவென் முன்னேறியுள்ளது. இந்திய அணி, கடந்த 1996ல் வெளியான பிபா ரேங்கிங்கில் சிறந்த இடமாக 94வது இடம் பிடித்தது.

அதற்கு முன் கடந்த 1993ல் 99வது இடமும், 1993 அக்டோபர், டிசம்பர், 1996 டிசம்பர் மாதங்களில் 101வது இடம் பிடித்தது. அதன்பின் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி தற்போது வெளியான ரேங்கிங் பட்டியலில் 101வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த தரவரிசையில் பிரேசில், அர்ஜெண்டினா, ஜெர்மனி அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

NEW DELHI: The Indian football team achieved its best-ever FIFA ranking in over two decades as it jumped to 101 in the latest list released on Thursday.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245