மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடாலை விழ்த்தி பெடரர் சாம்பியன் பட்டம் பெற்றார்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில், ஆடவர் ஒன்றையர் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலை எதிர்த்து விளையாடினார்.
இப்போட்டியில் தொடக்கத்திலிருந்தே துடிப்புடன் விளையாடிய பெடரர் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நடாலைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.
அண்மையில், ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியிலும் பெடரர்-நடால் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. இதில், நடாலை சாய்த்து பட்டத்தைக் கைப்பற்றினார் பெடரர். தொடர்ந்து, தற்போது மியாமி ஒபனிலும் நடாலை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் படிப்படியாக சர்வதேச டென்னிஸில் பெடரரின் ஆதிக்கம் மீண்டும் ஓங்கி வருவதாக விளையாட்டு ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Mobile AppDownload Get Updated News