திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய பெண் சாம்பியன் டூடி சாம்பியன் (20) கலந்து கொண்டார். ரியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு 11.68 நிமிடத்தில் இலக்கை அடைந்த அவர், இந்தப் போட்டியில் 11.65 நிமிடத்தில் பயண தூரத்தை கடந்து சென்று தங்கப் பதக்கம் வென்றார்.
ரியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு நடந்த முதல் போட்டியில் சென்டிரல் ரயில்வே சார்பில் கலந்து கொண்டு தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டதை கவுரவிக்கும் விதமாக ஒரிசா அரசு ஒரிசா சுரங்க கார்ப்பரேஷன் நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக நியமனம் செய்துள்ளது. வரும் 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.

Mobile AppDownload Get Updated News