கோல்கீப்பர் மற்றும் இரண்டு வீரர்களை ஏமாற்றி ஆர்சனல் வீரர் ஓசில் அடித்த கோல் வேகமாக வைரலாகி வருகிறது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில், ஆர்சனல் அணி, லுடாகிரிட்ஸ் அணியை எதிர்கொண்டது. இதன் முதல்பாதி துவங்கிய 20 நிமிடத்துக்குள் லுடாகிரிட்ஸ் அணியின் ஜொனாதன்(12வது நிமிடம்), கேசரு (15) இரண்டு கோல் அடித்தனர்.
இதற்கு ஆர்சனல் அணியின் ஜஹாகா (20), கிராவுத் (42) ஆகியோர் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து போட்டி ‘டிரா‘ ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 88வது நிமிடத்தில் ஆர்சனல் வீரர் ஓசில் அடித்த அசத்தலான கோலால் ஆர்சனல் அணி வெற்றி பெற்றது.
இந்த கோல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
Mobile AppDownload Get Updated News