Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

சர்வதேச மோட்டார் சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ளும் சீரியல் நடிகை..!

$
0
0

தைவானில் நடைபெற உள்ள சர்வதேச மோட்டார் சைக்கிள் போட்டியில் இந்தியாவிலிருந்து முதன்முறையாக ஐஸ்வர்யா பிஸ்ஸே என்ற டிவி சீரியல் நடிகை கலந்து கொள்ள இருக்கிறார்.

இவர் இந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் போட்டியில் ஆண்களுடன் கலந்து கொண்டு 20-வது இடம் பிடித்தவர்.பெண்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறார்.இதன்மூலம் உலக மோட்டார் சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை ஐஸ்வர்யா பெற்றுள்ளார்.

”நான் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொள்ளத் துவங்கிய போது பலரும் இது ஆண்களுக்கான விளையாட்டு,உனக்கு எதற்கு வீண் வேலை என கிண்டல் செய்தனர்.ஆனால் என்னுடைய கனவே சிறந்த மோட்டார் சைக்கிள் வீராங்கனை ஆக வேண்டும் என்பதுதான்.அதனால் மற்றவர்களின் பேச்சை கண்டுக்கொள்ளாமல்,முயற்சி செய்து இன்று இந்தியாவின் முண்ணனி வீராங்கனையாக உள்ளேன்.”என ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ஒரு மோட்டார் பந்தய வீராங்கனை மட்டுமல்ல.இவர் கன்னட டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.மாடலிங்கும் செய்து வருகிறார்.இந்தியாவின் சார்பில் முதன்முறையாக ஒரு பெண் சர்வதேச போட்டியில் கலந்து கொள்வது,பல பெண்களுக்கு ஊக்கமாக அமையும் என சக மோட்டார் பந்தய வீராங்கனைகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.



Bengaluru's model cum TV actress is now creating hostory, as she is the first woman to participate in an international motor rally. Her name is Aishwarya Pisse.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>