Ready or not - here we come @WTA @mhingis #SanTina pic.twitter.com/6sRrna02BG
இந்தியாவின் சானியா மிர்சா, சுவிச்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணைந்து பெண்கள் இரட்டையர் போட்டிகளில் பங்கேற்று உலகின் நம்பர் 1 என்ற இடத்தை பெற்றனர். இந்த இணை யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன் பிரிந்தது.
இந்த இணை 80 வாரங்கள் பெண்கள் இரட்டையர்களுக்கான முதல் இடத்தை பிடித்திருந்தது. இந்த இணை 3 கிராண்ட் சிலாம் பட்டங்கள், 11 உலக டென்னிஸ் தொடர்களை (WTA Finals title) வென்று அசத்தியது. அதோடு இரட்டையர் போட்டியில் தொடர்ந்து 41 வெற்றிகளை பெற்று அசத்தியது.
இந்த வெற்றி இணையின் பிரிவு டென்னிஸ் ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சிங்கப்பூரில் நடக்க உள்ள டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா மற்றும் ஹிங்கிஸ் இணை இணைந்து விளையாட உள்ளதாக சானியா மிர்சா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்த செய்தி இந்திய விளையாட்டு பிரிவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
Mobile AppDownload Get Updated News