It's official ✅Here are the 831 players who will be a part of the #FIFAWorldCup The #FIFAWorldCup Opening Ceremony is ALWAYS special.Sunday is going to kick off the festival of football in s… https://t.co/aG6WhGaZfE
இவற்றையெல்லாம் சமாளித்து தற்காலிக தீர்வுடன் உலகக்கோப்பை தொடரை நடத்த அந்நாட்டு அரசு தயாராகியுள்ளது. மொத்தம் 32 அணிகள் 8 பிரிவுகளின் கீழ் மோதவுள்ளன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா என்பதால் பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இதில் வெற்றிபெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வு என்பதால் பரிசுத்தொகையும் பிரம்மாண்டமாக இருக்கும். ஸ்பான்சர் தொகையும் கோடிக்கணக்கில் கொட்டும் என்பதில் சந்தேகமில்லை. 2006ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன்பு, சாம்பியன் அணிகள் 10 மில்லியன் டாலரை விட அதிகமான பரிசுத்தொகையை பெற்றதில்லை. 1982 சாம்பியன் இத்தாலி அணி பெற்ற பரிசுத்தொகை 2.2 மில்லியன் டாலர் ஆகும்.
கடந்த 2018ஆம் ஆண்டு பிரேசில் உலகக்கோப்பை தொடரில் மொத்த பரிசுத் தொகை 358 மில்லியன் டாலராக ஃபிஃபா நிர்ணயம் செய்திருந்தது. இதில் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணி 38 மில்லியன் டாலரும், 2வது இடம்பிடித்த குரோஷியா அணி 28 மில்லியன் டாலரும் பெற்றது. இம்முறை 40 மில்லியன் டாலர் கூடுதலாக நிர்ணயம் செய்து 440 மில்லியன் டாலர் என ஒட்டுமொத்த பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.அணிகள் பரிசுத்தொகை இந்திய ரூபாயில் (INR) வெற்றியாளர் 42 மில்லியன் டாலர் 344 கோடி 2வது இடம் 30 மில்லியன் டாலர் 245 கோடி 3வது இடம் 27 மில்லியன் டாலர் 220 கோடி 4வது இடம் 25 மில்லியன் டாலர் 204 கோடி 5-8வது இடம் 17 மில்லியன் டாலர் 138 கோடி 9-16வது இடம் 13 மில்லியன் டாலர் 106 கோடி 17-32வது இடம் 9 மில்லியன் டாலர் 74 கோடி
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றாலே அவர்களுக்கு குறைந்தபட்ச பரிசுத் தொகை கிடைத்துவிடும். வெறுங்கையுடன் யாருமே திரும்ப மாட்டார்கள். இதேபோல் 2023ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான பரிசுத்தொகையையும் ஃபிஃபா அறிவித்துள்ளது.
இதன் ஒட்டுமொத்த பரிசுத்தொகை 60 மில்லியன் டாலர் ஆகும். இது ஆண்கள் உலகக்கோப்பை பரிசுத்தொகையை விட 7 மடங்கு குறைவு என்பது கவனிக்கத்தக்கது. அதேசமயம் 2019ல் பிரான்ஸில் நடந்த மகளிர் உலகக்கோப்பை தொடரில் வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட இருமடங்கு அதிகம் ஆகும்.
Mobile AppDownload Get Updated News