புதிய கார் வெளியீட்டு விழாவில் முன்னாள் பார்முலா1 சாம்பியனும் அல்ஃபைன் அணியின் புதிய ஓட்டுனருமான பெர்னாண்டோ அலோன்சோ கலந்துகொண்டார். இரண்டு ஆண்டுகளாக மோட்டார் பைக் பந்தயத்தில் போட்டியிட்டு வந்த அவர் மீண்டும் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் களமிறங்குகிறார்.
2020ஆம் ஆண்டு வரை ரெனால்ட் என்று அழைக்கப்பட்ட அணி 2021 ஆம் ஆண்டிலிருந்து அல்ஃபைன் என்று அழைக்கப்படும். அல்ஃபைன் அணி முதல் சீசனில் கௌரவமான இடம் பிடிப்பதற்கு நிச்சயம் போராடும், அதற்கு முன்னாள் சாம்பியனான பெர்னாண்டோ அலோன்சோ பெரும் உதவியாக இருப்பார்.
கார் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் தான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் 100 சதவீதமாக உணர்வதாக தெரிவித்தார். சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளான அவர் எந்த ஒரு பாதிப்புமின்றி மீண்டும் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் பங்கேற்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2005 ஆம் ஆண்டு மற்றும் 2006 ஆம் ஆண்டு ரெனால்ட் அணி சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதற்கு பெர்னாண்டோ அலோன்சோ மிகப் பெரிய பங்காற்றினார்.
மெர்சிடஸ் அணி ஆதிக்கம் செலுத்திவரும் இச்சமயத்தில் அல்ஃபைன் அணி சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வது கேள்விக்குறியாக இருந்தாலும், சென்ற ஆண்டு ரெனால்ட் அணி பிடித்த ஐந்தாம் இடத்தை விட உயர்ந்த இடத்தை பிடிப்பது அல்ஃபைன் அணியின் பிரதான நோக்கமாக இருக்கும். அணியின் மற்றொரு ஓட்டுனரான ஒக்கான் இன்று பயிற்சி ஓட்டம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு ஆல்ஃபா தாரி அணிக்காக போட்டியிட்ட கிவ்யாட் இந்த ஆண்டு அல்ஃபைன் அணியின் மூன்றாவது ஓட்டுனராக செயல்படுவார். இது அணிக்கு பெரும் பலமாகவே பார்க்கப்படுகிறது.
Mobile AppDownload Get Updated News