Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

பிபின் சிங் ஹாட்ரிக்: கோல் மழை பொழிந்த மும்பை

$
0
0

இந்தியன் சூப்பர் லீகின் 105வது ஆட்டத்தில் இன்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மும்பை அணியும், கடைசி இடமான பதினோராவது இடத்தில் இருக்கும் ஒடிசா அணியும் மோதின.

இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. லீக் போட்டிகளில் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் இரண்டையும் வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெறுவதற்கான வாய்ப்பு மும்பை அணிக்கு கிடைக்கும், எனவே இந்த ஆட்டத்தை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கினர் மும்பை அணியினர்.
81202006

நடப்பு சீசனை கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வந்த மும்பை அணி தொடர்ந்து இரண்டு தோல்விகளை தழுவிய காரணத்தால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டனர், அதிலிருந்து மீண்டு மறுபடியும் வெற்றிப்பாதைக்கு திரும்புவதற்கு ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டம் அருமையான வாய்ப்பாக அமைகிறது.

2018-19 சீசனில் ஆடிய 18 ஆட்டங்களில் 9 புள்ளிகள் மட்டுமே குவித்தது சென்னை அணி, சீசனில் மிகக்குறைவான புள்ளி எண்ணிக்கையாக அது தொடர்கிறது, ஒடிசா அணியும் தற்பொழுது ஆடிய 18 ஆட்டங்களில் 9 புள்ளிகள் மட்டுமே குவித்துள்ளது எஞ்சியிருக்கும் இரண்டு ஆட்டங்களிலும் அவர்கள் தோல்வியடையும் பட்சத்தில் சென்னை அணியின் சாதனையை சமன் செய்துவிடும். இப்படிப்பட்ட தேவையற்ற சாதனை சமன் செய்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஒடிசா அணி அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் களமிறங்கும், அதுபோல இந்த ஆட்டத்தில் மும்பை அணியினருக்கு எதிராக தோல்வியை தழுவக் கூடாது என்ற எண்ணத்தில் களமிறங்கியது.
81203059

ஆட்டத்தின் துவக்கம் ஒடிசா அணிக்கு மிகச்சிறப்பாக அமைந்தது, ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் மும்பை அணியின் நடுகள வீரரான ஜஹு ஒடிசா அணியின் ஜெர்ரியை தட்டி விட்டதால் ஒடிசா அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது, அதை எடுக்க முன்வந்த ஒடிசா அணியின் நட்சத்திர வீரர் மௌரிசியோ கோலாக மாற்றி ஒடிசா அணியை முன்னிலை பெறச் செய்தார். அதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த மும்பை அணி ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீகிக்கை ஜஹு சுழற்றி விட அதை ஒக்பேசி தலையால் முட்டி கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். மும்பை அணியினர் ஆட்டத்தை சிறப்பாக நகர்த்திச் சென்றனர், ஒடிசா அணியினரால் தாக்குதல் நடத்த முடியாத அளவிற்கு மும்பை அணியினர் ஆட்டத்தை ஆதிக்கம் செலுத்தினர்.

முதல்பாதியின் கடைசி பத்து நிமிடங்களுக்கு மும்பை அணி டாப் கியரில் சென்றது. ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் மும்பை அணியின் பிபின் சிங் அணியின் இரண்டாவது கோலை அடித்து மும்பை அணியை முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து தாக்குதல் நடத்திய மும்பை அணிக்கு ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஜஹு கொடுத்த கிராஸ்சை ஒக்பேசி கோலாக மாற்றி அணியின் முன் நிலையை இரண்டாக அதிகரித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மும்பை அணியின் கோட்டர்ட் மற்றொரு கோல் அடிக்க மும்பை அணியை 3 கோல் முன்னிலை பெறச் செய்தார். முதல் பாதி 4-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணிக்கு சாதகமாக முடிந்தது.
81194317

முதல் பாதியை எங்கு விட்டார்களோ அங்கேயே துவங்கியது மும்பை அணி, ஆட்டம் துவங்கிய முதல் நிமிடத்திலேயே ஒக்பேசி கொடுத்த பாசை பிபின் சிங் கோலாக மாற்ற மும்பை அணி 4 கோல் முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய மும்பை அணியின் சார்பாக ஜஹு, பிபின் சிங், கோட்டர்ட் என அனைவரும் கோலை நோக்கி அடிக்க பந்துகள் தவறி செல்ல ஆட்டம் 5-1 என்ற கோல் கணக்கில் முடிவை நோக்கி சென்றது. அந்த சமயத்தில் மும்பை அணிக்கு பெனால்டி கிடைக்க அதை எடுக்க முன்வந்த ஜஹு அடித்த பெனால்டியை ஒடிசா அணியின் கோல்கீப்பர் அர்ஷ்தீப் சிங் பாய்ந்து தட்டிவிட்டார். அதற்கு பதிலடி கொடுத்த மும்பை அணியின் பிபின் சிங் ஆட்டத்தின் 86வது மூலத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து மும்பை அணியை 6-1 இன்று கோல் கணக்கில் வெற்றி பெறச் செய்தார்.

நடப்பு சீசனில் பதிவு செய்யப்பட்ட முதல் ஹாட்ரிக்காக இது அமைந்தது மட்டுமல்லாமல் நடப்பு சீசனில் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய வெற்றியாகவும் இது அமைந்தது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>