எல்சிஆர் ஹோண்டா அணியின் சார்பாக வெளியிடப்பட்ட புதிய பைக்கிர்க்கு RC213V என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு ரெப்சால் ஹோண்டா அணிக்காக போட்டியிட்ட முன்னாள் உலக சாம்பியன் மார்க் மார்க்கஸ்ஸின் சகோதரரான அலெக்ஸ் மார்க்கஸ் இந்த ஆண்டு எல்சிஆர் ஹோண்டா அணிக்காக களம் இறங்குகிறார்.
சென்ற ஆண்டு 14வது இடத்தை பிடித்த அலெக்ஸ் மார்க்கஸ் அணியில் இணைந்து இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. சென்ற ஆண்டு ஹோண்டா அணி சார்பாக களமிறங்கிய எல்சிஆர் ஹோண்டா அணியும், ரெப்சால் ஹோண்டா அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் ஹோண்டா அணி கடைசிக்கு முந்தைய இடமான ஐந்தாம் இடத்தை பிடித்தது.
ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த ஹோண்டா அணியினர் சென்ற ஆண்டு பரிதாபமான இடத்தைப் பிடித்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த ஆண்டு இதை மேம்படுத்துவதே ஹோண்டா அணியின் முதல் குறிக்கோளாக இருக்கும். இதனால் சென்ற ஆண்டு எல்சிஆர் ஹோண்டா அணிக்காக போட்டியிட்ட கிராட்ச்லோ இந்த ஆண்டு இடம் பெறவில்லை. அவர் யமஹா அணியின் சோதனை ஓட்டுனராக இணைந்துள்ளார். இந்த ஆண்டு ஹோண்டா அணியினர் மீண்டும் வெற்றிகளை குவிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Mobile AppDownload Get Updated News