Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

உலகக் கோப்பை கபடி : அர்ஜென்டினாவுக்கு எதிராக இந்தியா சாதனை வெற்றி

$
0
0

அகமதாபாத்: உலகக் கோப்பை கபடி போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 74-20 என்ற புள்ளி கணக்கில் சாதனை வெற்றி பெற்றுள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உலகக் கோப்பை கபடி போட்டி நடைபெற்று வருகின்றது. இப்போட்டியின் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது இந்திய அணி. நேற்று இரவு நடந்த லீக் போட்டியில் இந்திய அணி அர்ஜெண்டினாவை எதிர் கொண்டது. இப்போட்டியில் இந்திய அணி அர்ஜெண்டினாவை 74-20 என்ற புள்ளி கணக்கில் அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

சாதனை வெற்றி:
இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் இவ்வளவு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில்லை. அர்ஜெண்டினாவுக்கு எதிராக (74-20) 54 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் அஜய் தாகூர், ராகுல் சவுத்ரி ஆகியோர் இணைந்து 25 ரெய்டு புள்ளிகளை பெற்று, வெற்றிக்கு உதவினர். இப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக புள்ளிகளை எடுக்க அர்ஜென்டினா போராடியது.

முதல் போட்டியில் தென் கொரியாவுக்கு எதிராக தோலிவியடைந்தாலும், அடுத்தடுத்த ஆஸ்திரேலியா, வங்கதேசம், அர்ஜெண்டினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன் மூலம் அரையிறுதிக்கு சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>