Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

மான்ஸ்டர் எனர்ஜி யமஹா அணியின் புதிய பைக் வெளியீடு: 2026 வரை புதிய ஒப்பந்தம்!

$
0
0

மோட்டோ ஜிபி பைக் பந்தயத்தில் 60 ஆண்டுகளாக போட்டியிட்டு வரும் யமஹா அணியின், மான்ஸ்டர் எனர்ஜி யமஹாவின் 2021 ஆம் ஆண்டிற்கான பைக் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் 2020ஆம் ஆண்டு மான்ஸ்டர் எனர்ஜி யமஹா அணிக்காக போட்டியிட்டு ஆறாம் இடம்பிடித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மாவெரிக் வினாலெஸ்சும், 2020ஆம் ஆண்டு பெட்ரோனாஸ் யமஹா அணிக்காக போட்டியிட்டு இந்த ஆண்டு மான்ஸ்டர் எனர்ஜி யமஹா அணியில் இணைந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபாபியோ குவார்டராரோவும் கலந்து கொண்டனர்.

சென்ற ஆண்டு மான்ஸ்டர் எனர்ஜி யமஹா அணிக்காக போட்டியிட்ட மோட்டோ ஜிபி ஜாம்பவானான வாலென்டினோ ரோஸ்ஸி இந்த ஆண்டு பெட்ரோனாஸ் யமஹா அணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இது மான்ஸ்டர் எனர்ஜி யமஹா அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைகிறது.

80885679

ஆனால் அவர் இன்னும் யமஹா அணிக்காகத் தான் போட்டியிடுவார் என்பதால் பெரிய அளவில் ரசிகர்களிடையே அதிருப்தி இல்லை. மேலும் கரட்ச்லோ மான்ஸ்டர் எனர்ஜி யமஹா அணிக்கு சோதனை ஓட்டுனராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80975619

80971542

கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் யமஹா அணி பல சாதனைகளை புரிந்துள்ளது. இந்நிலையில் யமஹா அணி மேலும் 5 ஆண்டுகளுக்கு மோட்டோ ஜிபி போட்டியில் பங்கேற்பதற்காக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு வரை யமஹா அணி மோட்டோ ஜிபி போட்டியில் பங்கேற்கும்.

80754372

இந்த செய்தி ரசிகர்களுக்கு 'Cherry on the top'ஆக அமைந்தது. வருகின்ற மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கவிருக்கும் 2021 ஆம் ஆண்டிற்கான மோட்டோ ஜிபி சீசன் நெருங்க நெருங்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போகின்றது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>