Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

இரண்டு கோல் பின்நிலையிலிருந்து வெற்றி பெற்ற மோகன் பேகன்!

$
0
0

இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் 78வது ஆட்டத்தில் கேரளா அணியும் மோகன் பேகன் அணியும் மோதின. இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் மோகன் பேகன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலகத்தில் இருக்கும் தலைசிறந்த கவுண்டர் அட்டாக் அணிகளை போல ஆட்டத்தின் துவக்கத்தில் ஒரு கோல் அடித்து விட்டு அதன் பின் கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடுவது மோகன் அணியின் வழக்கம். இவர்கள் ஆடிய 13 ஆட்டங்களில் 13 கோல்கள் மட்டும் பதிவு செய்துள்ளனர். இருந்தாலும் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றனர். கடந்த 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிரா என ஒரு நிதானமற்ற சூழலில் கேரளா அணியை எதிர்கொண்டனர்.

மறுமுனையில் கேரளா அணியும் கடந்த ஐந்து ஆட்டங்களில் இரண்டு வெற்றி மூன்று டிரா என ஒரு நிதானமற்ற சூழலில் மோகன் பேகன் அணியினரை எதிர்கொண்டனர். லீக் போட்டிகளின் இறுதி கட்டத்திற்கு வந்து விட்ட காரணத்தால் அனைவரின் கண்களும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதிலேயே இருக்கின்றது. புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கும் கேரளா அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் ஆறாவது இடத்திற்கு முன்னேறும். மேலும் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த கேரளா இம்முறை பழிவாங்கும் எண்ணத்தோடு களமிறங்கும். இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் ஆட்டத்தை போலவே கேரளா அணி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது, மோகன் பேகன் அணியும் எதிர்பார்த்ததை போலவே தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது.
80630141

80617881

ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் சந்தீப் சிங் கொடுத்த கிராஸ்ஸை தன் நெஞ்சால் பந்தை கட்டுப்படுத்தி ராக்கெட் வேகத்தில் ஒரு கோல் அடித்தார் கேரளா அணியின் ஹுப்பர், ஆட்டத்தில் முன்னிலை பெற்ற கேரளா அணி தொடர்ந்து வாய்ப்புகளை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக ஹூப்பர் மற்றும் முர்ரே ஆகியோர் தொடர்ச்சியாக மோகன் அணியின் தடுப்பு ஆட்டத்திற்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தனர். இருவரும் மாறி மாறி கேரளா அணி சார்பாக தாக்குதல் நடத்த மறுமுனையில் கவுண்டர் அட்டாக்கின் வழியாக மோகன் பேகன் அணியின் கேப்டன் ராய் கிருஷ்ணா இரண்டு முறை கேரளா அணியின் கோல் கீப்பரை சோதித்தார். இரண்டாவது கோல் பதிவு செய்து ஆட்டத்தை முடித்து விடலாம் என்ற எண்ணத்தில் கேரளா அணி செய்த தாக்குதல் ஆட்டங்கள் அனைத்தும் கோலாக மாறாமல் ஏமாற்றமடைந்தனர்.

இரண்டாம் பாதியிலும் தொடர்ந்து கேரளா அணி தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்தது, எப்படியாவது ஒரு கோல் அடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆட்டத்தின் 50 ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. சமாத் அடித்த கார்னரை கோஸ்டா தனது தலையால் முட்டி கோலைநோக்கி பந்தை செலுத்தினார். ஆனால் அதை மோகன் பேகன் அணியின் கோல்கீப்பர் தட்டிவிட அது மீண்டும் கோஸ்டாவின் கால்களுக்கு வர அதை மீண்டும் கோலாக மாற்றினார். 2-0 என முன்னிலை பெற்ற கேரள அணியினருக்கு மோகன் பேகன் திருப்பி கொடுக்கும் நேரம் வந்தது. அதுவரை தடுப்பு ஆட்டத்தில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த மோகன் அணி வெகுண்டெழுந்தது. ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் மார்சலீனோ ஒரு கோல் அடித்தார்.
80630156

80628387

அதைத் தொடர்ந்து 65 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை கோலாக மாற்றினார் ராய் கிருஷ்ணா. சற்று வேகத்தைக் குறைக்காமல் தொடர்ச்சியாக கேரளா அணியின் தடுப்புச் சட்டத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதற்கிடையில் கேரளா அணியின் சமாத், ஹூப்பர் ஆகியோருக்கு கிடைத்த வாய்ப்புகளை அவர்கள் நழுவ விட்டனர். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் 87வது நிமிடத்தில் ராய் கிருஷ்ணா மீண்டும் ஒரு கோல் அடிக்க மோகன் பேகன் அணி 3-2 என முன்னிலை பெற்றது. அதன்பின் மோகன் பேகன் அணி சிறப்பாக தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டு அவர்களின் முன்னிலையை காத்துக் கொண்டனர். ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததால் சலசலப்பு நிலவியது. ஆட்டத்தின் கடைசி ஆறு நிமிடத்தில் 6 வீரர்களுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இரண்டு கோல் முன்னிலையை கோட்டை விட்ட கேரளா அணி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் நீடிக்கிறது. இனிவரும் ஆட்டங்களில் இதுபோன்று கவனக்குறைவாக விளையாடினால் பிளே ஆஃப் சுற்று வெறும் கனவாகவே போய்விடும்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்


Sleepy Hollow (1999) Tamil Dubbed Movie HD 720p Watch Online


சித்தன் அருள் - 877 - தாவர விதி!


படம் இயக்குவது என் நோக்கம் அல்ல - சிவகார்த்திகேயன்


நுழைவுத்தேர்வு


புழல் சிறையில் கைதி கொலை எதிரொலி : உதவி ஜெயிலர், வார்டன் சஸ்பெண்ட்


திருமூலர் அருளிய உயிர்காக்கும் ரகசிய மந்திரம்


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>