Unreal Debut from Amad Diallo https://t.co/sDS9ckXMCx 14 minutes into his Man Utd u23’s debut and Amad Diallo has already scored vs Liverpool. No doubt the first of many. Lionel Messi watching Amad Diallo https://t.co/50C9oP1Qz9
இறுதியில் இவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் அவர் முதன்முறையாக மான்செஸ்டர் யுனைடெட் இளைஞர் அணிக்கு விளையாடினார். இவரது ஆட்டத்தை காண்பதற்கு பல்வேறு ரசிகர்கள் இணையதளத்தில் குவிந்தனர். இவரது ஒவ்வொரு அசைவையும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பரம விரோதி அணியான லிவர்பூல் அணியின் இளைஞர் அணிக்கு எதிராக இவர் இன்று ஆடிய ஆட்டம், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய வீரனாக திகழ்வார் என்று பலர் கூறியிருந்த நிலையில், அவருடைய ஆட்டத்தை கண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ரசிகர்கள் வியந்தனர்.
மேலும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு தாக்குதல் ஆட்டக்காரர் தேவைப்படும், இந்த சமயத்தில் அமாட் டியாலோ போன்ற இளம் வீரர்களை இளைஞர் அணியில் விளையாட விடுவதற்கு பதிலாக பிரதான அணியில் விளையாட வைக்க வேண்டும் என்று பல ரசிகர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் கோரிக்கை வைத்தனர்.
இந்த ஆட்டத்தில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 2 கோல்களை பதிவு செய்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. பல்வேறு பெரிய அணிகள் விளையாடுவதை பார்ப்பதை விட்டுவிட்டு, இந்த இளம் வீரர் ஆடுவதை ரசிகர்கள் பார்த்து ரசித்தனர் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள்.
Mobile AppDownload Get Updated News