Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது நார்த் ஈஸ்ட்: சர்ச்சைக்குரிய தீர்ப்பால் சலசலப்பு!

$
0
0

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 72வது ஆட்டம் மோகன் பேகன் அணிக்கும் நார்த் ஈஸ்ட் அணைக்கும் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை அணி டிரா ஆனதன் காரணமாக, இந்த ஆட்டத்தில் மோகன் பேகன் அணி வெற்றி பெறும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் இடையே இருக்கும் புள்ளி வித்தியாசத்தை குறைப்பதற்கான வாய்ப்பு உருவானது.

மறுமுனையில் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் நார்த் ஈஸ்ட் அணி இந்த போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் 4வது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியுடன் புள்ளியில் சமம் அடையலாம், இது எதிர்காலத்தில் பிளே ஆஃபிர்க்கு முன்னேறுவதற்கு பெரும் பங்காற்றும். இரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் மோகன் பேகன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதற்காக பதிலடி கொடுக்கவும் பிளே ஆஃப் ஸ்பாட்டில் இடம் பெற வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கியது நார்த் ஈஸ்ட் அணி.

முதல் பாதி துவங்கியதும் எப்பொழுதும் போல மோகன் பேகன் அணியினர் பந்தை தங்கள் வசம் வைத்துக் கொண்டு எதிரணியை விளையாட விடாமல் செய்தனர், ஆனால் நார்த் ஈஸ்ட் அணி கவுண்டர் அட்டாக் முறையை கையாளுவதால் பந்தை அதிக நேரம் வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். மோகன் பேகன் அணி சார்பாக ஹேர்நாண்டஸ், வில்லியம்ஸ், கிருஷ்ணா என மாறி மாறி கோலைநோக்கி பந்துகளை அடிக்க, மோகன் பேகன் அணியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பார்சிலோனா அணியில் மீண்டும் மெஸ்ஸி: ரசிகர்கள் கொண்டாட்டம்!

அதைப்போலவே மறுமுனையில் நார்த் ஈஸ்ட் அணியின் நட்சத்திர வீரரான கல்லேகோ, மச்சாடோ, சுஹேர் என அவர்கள் சார்பாக கோலை நோக்கி பந்தை அடிக்க அவைகளும் கோலாக மாற்றப்படவில்லை. முதல்பாதியில் மோகன் பேகன் அணி பந்தில் ஆதிக்கம் செலுத்திய போதிலும், நார்த் ஈஸ்ட் அணி தாக்குதல் ஆட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டது. முதல் பாதியில் இரு அணிகளும் பெரிய அளவில் வாய்ப்புகளை உருவாக்காத போதிலும் ஆட்டம் சுவாரசியமாக அமைந்தது, மேலும் இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்தது.

அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே துவங்கிய இரண்டாம் பாதி சற்று மந்தமாகவே தொடங்கியது, இரு அணிகளும் பெரிய அளவில் வாய்ப்புகளை உருவாக்காத நிலையிலும் அவ்வப்போது எதிரணிகளின் தடுப்பு ஆட்டத்தை சோதித்து வந்தனர். ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணிக்காக மச்சாடோ கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால் மோகன் பேகன் அணியினரால் இதை ஒப்புக் கொள்ள இயலவில்லை காரணம், கல்லேகோ கொடுத்த பாசை மச்சாடோ மோகன் பேகன் அணியின் தடுப்பு ஆட்டக்காரரான டிரியை தள்ளிவிட்டு பந்தை கடத்தி சென்றார்.

ஆனால் இதற்கு நடுவர் ஃபவுல் கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மோகன் பேகன் அணியினர் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்டத்தை துவங்கிய மோகன் அணியினரின் ஆட்டத்தில் அனல் பறந்தது, கடுமையான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர், இதன் பலனாக ஆட்டத்தின் 72 ஆவது நிமிடத்தில் ராய் கிருஷ்ணா மூலம் மோகன் பேகன் அணியினருக்கு ஒரு கோல் கிடைத்தது. ஆட்டம் சமநிலை பெற்றதும் நார்த் ஈஸ்ட் அணி அவர்கள் பங்கிற்கு தாக்குதலில் ஈடுபட்டனர்.

அதன் பலனாக 80வது நிமிடத்தில் கல்லேகோ மூலம் நார்த் ஈஸ்ட் அணிக்கு ஒரு கோல் கிடைக்க மீண்டும் முன்னிலை பெற்றது. இதன்பின் நார்த் ஈஸ்ட் அணி விழிப்புடன் தெளிவாக தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் மோகன் பேகன் அணியினரால் வாய்ப்புகளை உருவாக்கி பதிவு செய்ய முடியாமல் ஆட்டம் முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது நார்த் ஈஸ்ட் அணி.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>