Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம் டிரா: 5ஆம் இடத்தை நழுவ விட்டது ஜம்ஷெட்பூர்!

$
0
0

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 69-வது ஆட்டம் ஜம்ஷெட்பூர் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி ஆட்டத்தை வெல்லும் பட்சத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கும் கோவா அணியை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்திற்கு முன்னேறும். அதைப் போலவே ஜம்ஷெட்பூர் அணியும் ஆட்டத்தை வெல்லும் பட்சத்தில் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேற முடியும். இரு அணிகளும் மோதிய முதல் ஆட்டம் நடப்பு சீசனில் நடைபெற்ற சுவாரசியமான ஆட்டங்களில் ஒன்று.

ஆட்டம் 1-1 என்று ட்ராவல் முடிந்தாலும் ஆட்டத்தில் வேகம் காணப்பட்டது. ஆனால் ஜம்ஷெட்பூர் அணி கடந்த 3 ஆட்டங்களாக தோல்வியை தழுவியது. இதிலிருந்து மீண்டு வருவதற்கு இந்த ஆட்டம் ஒரு அருமையான வாய்ப்பு. மறுமுனையில் ஹைதராபாத் அணி கடந்த நான்கு ஆட்டங்களில் தோல்வியை தழுவாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளி பட்டியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதனால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் ஆட்டம் துவங்கியது.

80437358

ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரரான லிஸ்டன் இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் துவக்கம் மந்தமாகவே அமைந்தது. குறிப்பாக ஹைதராபாத் அணி ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டு வந்தது. ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் ஸ்ட்ரைக்கர் கியாநீசிக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்க அதை கோட்டை விட்டார். அதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு முறை ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் அவர் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை ஹோலிச்சரன் கோலை நோக்கி பந்தை செலுத்த அது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.
80441941

அதைத் தொடர்ந்து ஜம்ஷெட்பூர் அணிக்காக 38 ஆவது நிமிடத்தில் பரூக் ஒரு ஷாட் அடிக்க அது கோலில் இருந்து சற்று விலகி சென்றது. ஆட்டத்தின் 42 வது நிமிடத்தில் மான்ராய் கொடுத்த கார்னர் கிக்கை அணியின் எசே தலையால் முட்டி கோலாக மாற்ற முயல பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. முதல் பாதியில் கிடைத்த வாய்ப்புகளை இரு அணிகளும் நழுவ விட்டதன் காரணமாக, முதல்பாதி 0-0 என்ற கோல் கணக்கில் முடிவு பெற்றது. இரண்டாம் பாதி மந்தமாக துவங்கியது. முதல் பாதியை போல துவக்கம் மந்தமாக இருந்தாலும் முடிவு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்க,

80437225

ஆட்டத்தின் 77-வது நிமிடம்வரை இரு அணிகளும் வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை. ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் ஹைதராபாத் அணி எடுத்த ஃப்ரீ கிக்கை ஜம்ஷெட்பூர் அணியின் தடுப்பு ஆட்டக்காரர் எசே தலையால் முட்டி வெளியே தள்ள அது ஹைதராபாத் அணியின் ஸ்ட்ரைக்கர் அரிடானேவை வந்து சேர்ந்தது. அதை அவர் கோலாக மாற்ற எண்ணி பந்தை அடிக்க அது ராக்கெட் வேகத்தில் வெளியே சென்றது. இரண்டாம் பாதியில் உருவாக்கப்பட்ட ஒரே தெளிவான வாய்ப்பு இது மட்டும்தான். இரண்டாம் பாதி ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் படி அமைந்தது. இறுதியில் 0-0 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இதனால் புள்ளிப் பட்டியலில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தவாறு அப்படியே இருக்கின்றனர்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>