Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ரியல்மாட்ரிட் மேலாளருக்கு கொரோனா தொற்று!

$
0
0

கால்பந்து உலகத்தை 90களில் அலங்கரித்த வீரர்களுள் முக்கியமான ஒருவர் சிடான்.

இத்தாலியில் யுவெண்டஸ் அணிக்காகவும், ஸ்பெயினில் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் பல்வேறு கோப்பைகளை வென்று தந்துள்ளார். குறிப்பாக 2002ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கோப்பையின் இறுதிப்போட்டியில் லெவர்குசெண் அணிக்கு எதிராக அவர் கோல் அடித்து ரியல் மாட்ரிட் அணி கோப்பையை வெல்ல உதவி செய்தார், அந்த ஆட்டத்தில் இவரைப் பாராட்டி ஆட்டநாயகன் விருதும் தரப்பட்டது.

மேலும் பிரான்ஸ் நாட்டிற்காக 1998ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெல்வதற்கு பெரிதும் காரணமாக இருந்தார். 2006ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் இத்தாலி நாட்டின் தடுப்பு ஆட்ட வீரர் மட்டராட்ஸ்ஸியை தலையால் முட்டியதற்கு அவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் இதனால் அந்த போட்டியில் பிரான்ஸ் நாடு தோல்வியுற்றது.
80416412

2006 ஆம் ஆண்டு கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தொடர்ச்சியாக சிரு அணிகளுக்கும், இளம் வீரர்களுக்கும் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்கு மேலாளராக நியமிக்கப்பட்டார். இவரது சிறப்பான செயல்பாட்டின் காரணமாக 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ரியல் மாட்ரிட் அணிக்காக பெற்றுத்தந்து சாதனை படைத்தார்.

தொடர்ந்து அணியின் தலைவரான பெரெஸ்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தனது மேலாளர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்து 10 மாதத்திற்குள் மீண்டும் மேலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் முதல் முறை மேலாளராக நியமிக்கப்பட்டு தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவரால் இரண்டாவது முறை பெரிய அளவில் வெளிப்படுத்த இயலவில்லை இருப்பினும் சென்ற ஆண்டு இவர் லா லிகா கோப்பையை தட்டிச் சென்றார். சமீபகாலமாக ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வந்தது, இவர் இந்த பணியில் நீடிப்பாரா என்ற சந்தேகங்கள் எழும்பின.
80404746

இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரியல் மாட்ரிட் அணி சமீபகாலமாக தோல்வியடைந்த நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் லா லிகா போட்டியில் பெட்டோனி மேலாளராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>