Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

பிளே ஆஃப் ஸ்பாட்டிற்கு முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டது சென்னை!

$
0
0

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 66வது ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மோகன் பேகன் அணியும், புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் சென்னை அணியும் மோதின. சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் ஸ்பாட்டிற்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது, ஆனால் மோகன் பேகன் அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. நடப்பு சீசனில் இரு அணிகளும் ஆடிய முதல் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. இரு அணிகளும் ஆடிய முதல் ஆட்டம் மந்தமாக அமைந்தது. முதல் ஆட்டம் போல் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் சென்னை அணியினருக்கு பிளே ஆஃப் ஸ்பாட்டிற்கு முன்னேறும் வாய்ப்பு இருந்ததனால் அவர்கள் வெற்றி பெறும் எண்ணத்தோடு களம் இறங்குவார்கள் என்றும், மறுமுனையில் மோகன் பேகன் அணியினர் முதல் இடத்தில் இருக்கும் மும்பை அணியினருக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும், மேலும் முதலாம் இடத்தை நோக்கி நகர்வதற்கான ஒரு வாய்ப்பாக பார்க்கப்பட்டது. இரு அணிகளுக்கும் இதில் வெற்றி பெறுவதன் மூலம் பெரிய பரிசு காத்திருந்தது.

80389103

ஆனால் ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே ஆட்டம் மெதுவாகச் சென்றது. முதலாம் பாதியில் இரு அணிகளும் பெரிய அளவில் வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை. இரு அணியின் தடுப்பு ஆட்ட வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சென்னை அணி செய்த தாக்குதல்களை சிறப்பான முறையில் மோகன் பேகன் அணியின் தடுப்பு ஆட்ட வீரர்களான சந்தேஷ் ஜிங்கன் மற்றும் டிரி ஆகியோர் செயலிழக்கச் செய்தனர்.
80400773

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் பதிவு செய்யாமல் 0-0 என்று முடிந்தது. முதல்பாதியில் பெரிய அளவில் வாய்ப்புகளை உருவாகாமலும் ஆட்டம் மிக மந்தமாக இருந்தாலும், ஏமாற்றமடைந்த ரசிகர்கள் இரண்டாம் பாதியில் சற்று வேகமான ஆட்டத்தை எதிர்பார்த்த நிலையில், இரண்டாம் பாதி முதல் பாதியை விட மெதுவாகச் சென்றது. ஆட்டத்தின் இறுதி வேலை வரை இரு அணிகளும் வாய்ப்புகளை உருவாக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

ஆனால் இரு அணியின் தடுப்பு ஆட்டம் ரசிக்கும் படியாக அமைந்தது. இரு அணிகளும் எதிரணியின் தாக்குதல் ஆட்டங்களை சிறப்பாக கையாண்டு கோல் கீப்பரை பெரிய அளவில் சோதிக்காத வண்ணம் பார்த்துக் கொண்டனர். ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் மோகன் பேகன் அணிக்கு கிடைத்த கார்னர் கிக்கை அணியின் ஹேர்னாண்டஸ் சுழற்றி விட அதை சப்ஸ்டிட்யூடாக களமிறங்கிய வில்லியம்ஸ் தனது தலையால் முட்டி கோலாக மாற்றினார்.

80399562

ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் முன்னிலை பெற்று சென்னை அணிக்கு அழுத்தம் கொடுத்தார். ஆட்டத்தில் கூடுதலாக 6 நிமிடம் கொடுக்கப்பட்டது, அதில் நான்காவது நிமிடத்தில் சென்னை அணியின் சபியா கொடுத்த பாசை அணியின் ஸ்ட்ரைக்கர் என்னஸ் தலையால் முட்டி கோல் கீப்பர் இல்லாத கோலை நோக்கி பந்தை திருப்பி விட்டார், பந்து கோலாக மாறிவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்க, மோகன் பேகன் அணியின் தடுப்பு ஆட்டக்காரர் டிரி கோல் எல்லையில் வைத்து அதை தட்டி விட்டார். இறுதியில் ஆட்டத்தை மோகன் பேகன் அணி 1-0 இன்று கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles