Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

காதலருடன் கை கோர்க்கும் ஷரபோவா... வைரலாகும் புகைப்படம்!

$
0
0

டென்னிஸ் உலகில் நம்பர் 1 வீராங்கனையாகத் திகழ்ந்த ரஷ்ய நாட்டின் மரிய ஷரபோவா கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வுபெற்ற நிலையில், விரைவில் தனது காதலர் அலெக்சாண்டர் கில்க்ஸை கரம் பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அலெக்சாண்டர் ஆடம்பர கலைப் பொருட்கள் விற்பனை மையம் நடத்தி வருகிறார். இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பழகி வருகின்றனர்.

இதுகுறித்து ஷரபோவா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “நாங்கள் சந்தித்த முதல் நாளிலேயே அவரது காதலை ஏற்றுக்கொண்டேன். இது மிகப்பெரிய ரகசியம்...ஆமாதனே” எனப் பதிவிட்டு, இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணி மெகா சொதப்பல்: ஆஸி அதிரடி வெற்றி!

ஷரபோவாவின் காதலர் அலெக்சாண்டர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “காதலை ஏற்றுக்கொண்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதற்கு நன்றி. வாழ்நாள் முழுவதும் ஒன்றாகப் பயணிப்போம். உன்னிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார். தற்போது இருவரும் வெளியிட்டுள்ள இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.

17 வருடங்களாக டென்னிஸ் விளையாடி வந்த மரிய ஷரபோவா இதுவரை ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>