Un aplauso de reconocimiento a todos los profesionales de la sanidad. Sois nuestros héroes. GRACIAS de corazón. ❤ https://t.co/esIpLDYPXS
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இது மேலும் பரவாமல் இருக்க அதிகளவில் பொதுமக்கள் கூட வேண்டாம் என்று அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இதையொட்டி பல்வேறு விளையாட்டு தொடர்களுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி லா லிகா தொடர் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் லா லிகா தொடரில் விளையாடி வரும் ரியல் மாட்ரிட் அணியை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் செர்ஜியோ ராமோஸ் தனது ட்விட்டரில் சில பதிவுகளை இட்டுள்ளார்.
அதாவது, கொரோனாவிற்கு எதிராக போராடி வரும் அனைத்து மருத்துவர்களுக்கும், ஊழியர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் தான் என்னுடைய ஹீரோக்கள். எனது இதயத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா ஆட்டத்தால் அனைத்து ஆட்டங்களும் ஒத்திவைப்பு!
அதேசமயம் எங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதற்கு உதவிகரமாக இருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றியை கூறிக் கொள்கிறேன். உங்களைப் போன்று ஒற்றுமையுடனும், பெருந்தன்மையுடனும் செயல்படும் நபர்களால் தான் இந்த சமூகம் சிறப்பாக இயங்க முடிகிறது. நன்றி.
நாங்கள் உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பாதிப்பை உலகளாவிய தொற்று நோய் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News