Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஆக இப்பவரை ஒரு தங்கம், 4 வெண்கலம்... பெண்கள் பங்கு இன்று தொடங்கும், ஆசிய சாம்பியன்ஷிப்!

$
0
0

இந்தியாவில் நடந்து வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா நேற்று 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த ஆசு, ஹர்தீப், பஞ்சாப்பை சேர்ந்த அதித்யா குண்டூ ஆகியோர் வெங்கலம் வென்றவர்கள். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 4 வெண்கலம், ஒரு தங்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கலம் வென்றுள்ள ஆசுவிற்கு வயது 19 ஆகும். 67 எடைப் பிரிவில் களமிறங்கிய இவர், போட்டி தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு வரை தோள்பட்டையில் காயத்துடன் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தோள் காயம் காரணமாக ஒரு வருடம் கழித்து இப்போதுதான் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளார்.

“என்னால் நாட்டுக்காக விளையாட முடியும் என்ற நம்பிக்கையே இல்லை. காயத்தால் மிகவும் கஷ்டப்பட்டேன். இதனால் என்னை மருத்துவர்கள் மனநல ஆலோசனைகள் வழங்கினார்கள்” என டைம்ஸ் ஆப் இந்தியாவிற்குப் பேட்டி அளித்திருந்தார்.

யப்பா... இன்ஸ்டாகிராமில் இருந்து மட்டும் இத்தனை கோடி வருமானமா... சும்மா கெத்து காட்டும் ரொனால்டோ!

இந்தியாவிற்கான 2வது வெண்கலத்தை 72கிலோ எடைப் பிரிவில், 23 வயதான ஆதித்தியா பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து 97 கிலோ எடைப் பிரிவில் ஹர்தீப் 3வது வெங்கல பதக்கத்தை நாட்டின் பெயரில் பெற்றார். ஹர்தீப் 2016ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

74221934

இவர்கள் பெற்ற 3 வெண்கல பதக்கங்களுடன் முன்பு பெற்ற ஒரு வெண்கலம் ஒரு தங்கம் என மொத்தம் இந்தியா 4 வெண்கலம், ஒரு தங்கம் வென்றுள்ளது. இதற்கிடையே இன்று பெண்களுக்கான போட்டிகள் தொடங்குகிறது.

கோப் பிரையண்ட் மரணம் இப்படி தான்... 8 வருஷத்துக்கு முன்பே வெளியான ட்விட்டர் பதிவு!

இதில் பங்கேற்கப் போட்டி நடக்கும் காஜியாபாத் மாவட்டத்திற்கு இந்திய விராங்கனைகள் சென்றிருந்தார். ஆனால் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தும் அமைப்பு முறையான ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால் வீராங்கனைகள் அங்கு தங்குவதற்கு ரூம்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ரூம் எதுவும் கிடைக்காமல் வீராங்கனைகள் தவித்து வருவதை அறிந்த இந்தியக் குத்துச்சண்டை கூட்டமைப்பு, போட்டி நடக்கும் இடத்திற்கு அருகில் ஒரு தனியார் ஹோட்டலில் வாடகைக்கு ரூம் பெற்றுத் தந்ததுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>