Lap 19 ❤ #F1 #BelgianGP https://t.co/cseyDez2re Humble, vibrant, intelligent and passionate… The Frenchman will be deeply missed https://t.co/odygVN14XM
ஹாமில்டன் ஏமாற்றம்.....
இதில் பெராரி அணியின் மொனாகோ வீரர் சார்லஸ் லெக்லார்க் முதலிடம் பிடித்தார்.
மொத்தமாக 44 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் லெக்லார்க், பந்தய எல்லையை 1.23.45.710 நிமிடத்தில் கடந்து முதலிடம் பிடித்தார்.
இவரைவிட கூடுதலாக 0.981 வினாடிகள் எடுத்துக்கொண்ட மெர்சிடஸ் அணியின் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் இரண்டாவது இடம் பிடித்தார். மற்றொரு மெர்சிடஸ் வீரர் வால்டேரி போதாஸ் மூன்றாவது இடம் பிடித்தார். பெராரி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (+26.422 நிமிடங்கள்) நான்காவது இடம் பிடித்தார்.
நண்பன் நினைவாக
இந்த வெற்றியின் மூலம் லெக்லார் தனது முதல் வெற்றியை பதிவு செய்து சாம்பியன் கோப்பையை வென்றார். இதற்கிடையில் கடந்த 31ம் தேதி ஃபார்முலா-2 பந்தயத்தின் போது உயிரிழந்த தனது நண்பன் ஹூபர்ட்டுக்கு இந்த வெற்றியை சமர்பிப்பதாக லெக்லார்க் தெரிவித்தார். ஹூபர்ட் அணிந்திருந்த ஜெர்சியின் நம்பரான 19வது சுற்றில் ரசிகர்கள் போட்டியில் பங்கேற்ற வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
நம்பர்-1 ஹாமில்டன்.....
இந்தாண்டுக்கான வீரர்கள் புள்ளிப்பட்டியலில் மெர்சிடஸ் வீரர் லீவிஸ் ஹாமில்டன் மொத்தமாக 268 புள்ளிகள் பெற்ற லீவிஸ் ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு மெர்சிடஸ் வீரர் போத்தாஸ் (203 புள்ளிகள்) இரண்டாவது இடத்திலும், ரெட்புல் வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாபன் (181) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
Mobile AppDownload Get Updated News