இந்தியாவின் முன்னணி நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து. இவர் கடைசியாக நடந்த இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஃபைனலுக்கு தகுதி பெற்றார். ஆனால் அடுத்து நடந்த ஜப்பான் ஓபன் தொடரின் காலிறுதியில் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் நாளை தாய்லாந்தில் துவங்கும் தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இருந்து விலகுவதாக சிந்து தெரிவித்துள்ளார். ஆனால் இவர் விலகியதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அதேநேரம் காயம் காரணமாக இந்தோனேஷியா, ஜப்பான் ஓபன் தொடர்களில் பங்கேற்காமல் இருந்த மற்றொரு இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவல், இத்தொடரில் பங்கேற்கிறார்.
Mobile AppDownload Get Updated News