இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முன்னதாக தெலுங்கு டைடன்ஸ் உடன் நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
தலைவாஸ் அணியில் ராகுல் சவுத்ரி முதல் முறையாக இடம்பிடித்துள்ளார். இவர் தெலுங்கு டைடன்ஸ் உடனான போட்டியில் 12 புள்ளிகளைப் பெற்று தந்து அசத்தினார். இதேபோன்ற சிறப்பான ஆட்டத்தை இன்றைய போட்டியிலும் தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம்.
இவரைப் போல் மோஹித் சில்லர், மிலத் ஷேபக் ஆகியோரும் தமிழ் தலைவாஸ் அணிக்கு வலு சேர்த்து வருகின்றனர்.
Telugu Titans அணியை ஒரு புள்ளியில் வீழ்த்திய தபாங்க் டெல்லி
தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள்:
அஜய் தாகூர், ராகுல் சவுத்ரி, ஷபீர் பாப்பு, மஞ்சீத் சில்லர், ரன் சிங், மோஹித் சில்லர், மிலத் ஷேபக்
டெல்லியைப் பொறுத்தவரை தெலுங்கு டைடன்ஸ் அணியுடனான முதல் போட்டியில் 1 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விஷால் மானே, ரவிந்தர் பாஹல் ஆகியோர் அணிக்கு வலு சேர்க்கக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
PKL 2019: யுபி யோதா அணியை துவம்சம் செய்த பெங்கால் வாரியர்ஸ்
நவீன், சந்திரன் ஆகியோரது அட்டாக் ஆட்டம் இன்றைய போட்டியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தபாங் டெல்லி அணி வீரர்கள்:
நவீன் கோயத், சந்திரன் ரஞ்சித், நீரஜ் நர்வால், ஜோகிந்தர் நர்வால், விஷால் மானே, ரவிந்தர் பாஹல், மீரஜ் ஷேக்
Puneri Paltan அணியை எளிதாக வீழ்த்திய ஹரியானா ஸ்டீலர்ஸ்
Mobile AppDownload Get Updated News