பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜெவ்ரவை
எதிர் கொண்டார்.
இதில் துவக்க முதல் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் முதல் செட்டை 7–6 என வென்றார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் அசத்திய ஜோகோவிச் 6–2 என கைப்பற்றினார். மீண்டும் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் மூன்றாவது செட்டையும் 6-2 என தன்வசப்படுத்தினார்.
7-6, 6–2, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தையிம், ரஷ்யவின் கேரன் காஞ்சனோவாவை 6–2, 6–4, 6-2 வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
Mobile AppDownload Get Updated News