ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. சர்வதேச டென்னிஸ் அரங்கில் நட்சத்திர வீராங்கனையாக ஜொலித்த இவர், 5 கிராண்ட்ஸ்டாம் பட்டங்களை வென்றுள்ளார்.
திடீர் விலகல்:
இந்நிலையில் இவர் கடைசியாக செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நடந்த தொடரில் இருந்து வெளியேறிய பின் தற்போது வரை இவர் எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார். இதனால் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்த்த நிலையில், இத்தொடரில் இருத்து விலகியுள்ளார்.
இதை ரோம் ஒருங்கிணைப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இவர் இ ம்மாத இறுதியில் துவங்கும் கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபன் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இத்தாலி ஓபன் தொடரின் கடந்த 2011, 2012, மற்றும் 2015ல் ஷரபோவா சாம்பியன்பட்டம் வென்றுள்ளார்.
Mobile AppDownload Get Updated News